News October 30, 2025
ஃபோன் தண்ணீரில் விழுந்துருச்சா? DO THIS

உங்கள் போன் தண்ணீரில் விழுந்தால் ➤முதலில் அதனை SWITCH OFF பண்ணுங்க. ➤சார்ஜரில் கனெக்ட் செய்யவேண்டாம். இப்படி செய்தால் ஷார்ட் சர்க்யூட்டாகி போனின் பாகங்கள் சேதமாகிவிடும். ➤மொபைலில் இருந்து சிம் கார்டு, மெமரி கார்டு போன்றவற்றையும் அகற்றுங்கள் ➤காயும் வரை போனை ரீ-ஸ்டார்ட் செய்ய வேண்டாம். இவற்றை செய்தால் தண்ணீரில் விழுந்த உங்கள் போனில் எந்த பிரச்னையும் வராமல் பாதுகாக்கலாம். SHARE.
Similar News
News November 1, 2025
BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

USA ரிசர்வ் வங்கி அங்குள்ள வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் குறைத்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் ₹88.70 சரிந்துள்ளது. இது, அந்நிய செலாவணி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய், எலக்ட்ரானிக் பொருள்கள் இறக்குமதி விலை அதிகரிக்கும். குறிப்பாக, முதலீட்டாளர்கள் வெளியேறியதால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றன.
News November 1, 2025
இன்று முதல் அமலான புது ரூல்ஸ்.. கவனிச்சிக்கோங்க!

➥ஆதார் புதுப்பித்தலை ஆன்லைனில் செய்யலாம். Biometric அப்டேட் செய்வதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டது ➥இனி வங்கி கணக்குகள் & லாக்கர்களுக்கு வாடிக்கையாளர்கள் 4 நாமினிக்களை நியமிக்கலாம் ➥FASTag-ல் KYV (Know Your Vehicle) அப்டேட் கட்டாயமாக செய்திருக்க வேண்டும் ➥CRED, MobiKwik போன்ற 3-ம் தரப்பு செயலிகள் மூலமாக SBI கிரெடிட் கார்டு வைத்து கல்வி கட்டணம் செலுத்த, பரிவர்த்தனையில் 1% கட்டணமாக வசூலிக்கப்படும்.
News November 1, 2025
பைசன் படத்துக்கு பாலிவுட் இயக்குநர் பாராட்டு

‘பைசன்’ படம் ஒரு முழுமையான அதிரடி படம் என்று பாலிவுட் முன்னணி இயக்குநர் ஹன்சல் மேத்தா பாராட்டியுள்ளார். திரை மொழியில் சாதியம், சுதந்திரம், வன்முறை, அடிமைத்தனம் ஆகியவற்றை தைரியமாக எடுத்துக் கூறியதற்காக மாரி செல்வராஜுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தனக்கு தெரியாத பல நடிகர்கள் இருந்தாலும், கதைக்கு தேவையான கதாபாத்திரங்களாக மாறி, அவர்கள் தன்னை ரசிக்க வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


