News April 18, 2024
அதிமுகவினர் செல்போன் ஒட்டுக்கேட்பு தொடர்கிறது

தமிழக உளவுத்துறை அதிமுக நிர்வாகிகளின் செல்போன்களை ஒட்டுக் கேட்பது தொடர்வதாக அக்கட்சியின் வழக்கறிஞர் இன்பதுரை குற்றம் சாட்டியுள்ளார். இதற்காக ₹40 கோடி செலவில் ஒரு கருவியை இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்துவதாக தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் இதுவரை பதிலளிக்கவில்லை என்று கூறிய அவர், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் தெரிவித்தார்.
Similar News
News November 11, 2025
இன்று உலக முரட்டு சிங்கிள்ஸ் டே!

தவறான நபரை காதலிப்பதை விட, சிங்கிளாகவே இருப்பதே மேல் என்ற மனநிலைக்கு பலரும் வந்துவிட்டார்கள். அவர்களுக்காகவே, நவம்பர் 11, சிங்கிள்ஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. 11.11 என்ற நாள், அனைத்தும் ஒன்று என்பதால், இத்தினம் சிங்கிள்ஸ் டே-வாக தேர்ந்தெடுக்கப்பட்டு
கொண்டாடப்படுகிறது. சிங்கிளாக இருப்பதில் என்ன நன்மை இருக்கிறது என கமெண்ட் பண்ணுங்க. இதை படிக்கும் சிங்கிள்ஸ் ஒரு லைக் போடுங்க!
News November 11, 2025
2026-ல் குறைந்த தொகுதிகளில் அதிமுக போட்டியா?

2021 தேர்தலைவிட 2026-ல் குறைந்த தொகுதியில் ADMK போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. BJP- 25, PMK – 25, DMDK 10-15, தமாக மற்றும் சிறிய கட்சிகளுக்கு 15 தொகுதிகள் வரை வழங்க அதிமுக தயாராக இருக்கிறதாம். இதனால், கடந்த முறை 179 தொகுதிகளில் போட்டியிட்ட ADMK , இந்த முறை 150+ தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஒருவேளை BJP 40 இடங்களுக்கு மேல் கேட்டால், ADMK போட்டியிடும் தொகுதிகள் இன்னும் குறையலாம்.
News November 11, 2025
BREAKING: பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானார்

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (89) காலமானார். உடல்நலக்குறைவால் மும்பையின் பிரீச் கேண்டி ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது உயிர் பிரிந்ததாக India Today செய்தி வெளியிட்டுள்ளது. 1960-ல் வெளியான ‘Dil Bhi Tera Hum Bhi Tere’ படத்தில் அறிமுகமான அவர், 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.


