News October 30, 2025

கூலி படத்தை வறுத்தெடுத்த பாக்யராஜ்

image

PAN Indian படம் என்பதற்காக அந்தந்த ஊரில் இருந்து ஸ்டார்களை இறக்கினால் மட்டும் படம் ஓடுமா என பாக்யராஜ் விமர்சித்திருக்கிறார். என்னதான் PAN இந்தியா படம் என்றாலும், கதை இருந்தால்தானே படம் ஓடும் எனவும், இல்லையென்றால் எவ்வளவு பட்ஜெட் போட்டாலும் பிரயோஜனம் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், கூலி படத்தை தாக்கி பேசிய அவர் ஆமிர்கான் கூட அந்த படத்தில் நடித்ததை நினைத்து வருத்தப்பட்டார் என்று கூறியுள்ளார்.

Similar News

News October 30, 2025

கொத்து கொத்தா கொட்டும் முடி ஒரே வாரத்தில் சரியாக TIPS!

image

வெந்தயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடி வளர்ச்சிக்கு உதவுவதாக சித்தா டாக்டர்கள் சொல்றாங்க. ➤2 ஸ்பூன் வெந்தய விதைகளை தண்ணீரில் ஊற வையுங்கள் ➤அதை தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளுங்கள் ➤ அந்த பேஸ்ட்டை Scalp, தலைமுடியில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும் ➤பிறகு வெதுவெதுப்பான நீர் & ஷாம்பு பயன்படுத்தி அலசுங்கள். பலருக்கு பயனளிக்கும் SHARE THIS.

News October 30, 2025

நாளை மறுநாள் இங்கு பள்ளிகளுக்கு லீவு இல்லை!

image

மழை காரணமாக கடந்த 22-ம் தேதி விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 1-ம் தேதி(சனிக்கிழமை) பள்ளிகள் இயக்கும் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். கடந்த 22-ம் தேதி அன்று தொடர் மழை காரணமாக 17 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வீடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மற்ற மாவட்டங்களில் இருந்தும் விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News October 30, 2025

SC தலைமை நீதிபதியாக சூரியகாந்த் நியமனம்

image

சுப்ரீம் கோர்ட்(SC) தலைமை நீதிபதியாக சூரியகாந்தை நியமனம் செய்து, ஜனாதிபதி திரௌபதி முர்மு அறிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக உள்ள பி.ஆர்.கவாய், வரும் 23-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனால், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக உள்ள சூரியகாந்தை புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்து, கவாய், கடந்த வாரம் ஜனாதிபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

error: Content is protected !!