News October 30, 2025

சத்தீஸ்கரில் 51 மாவோயிஸ்டுகள் சரண்

image

சத்தீஸ்கர் பிஜப்பூர் மாவட்டத்தில், 9 பெண்கள் உட்பட 51 மாவோயிஸ்டுகள் சரணடைந்தனர். இவர்களில் 20 பேரின் தலைக்கு ₹66 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. 2026 மார்ச் 31-ம் தேதிக்குள் இந்தியாவில் நக்சலைட்டுகளை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் எதிரொலியாக, சத்தீஸ்கரில் டிச.2023 முதல் தற்போது வரை 2,250 பேருக்கும் மேல் சரணடைந்துள்ளனர்.

Similar News

News October 30, 2025

SC தலைமை நீதிபதியாக சூரியகாந்த் நியமனம்

image

சுப்ரீம் கோர்ட்(SC) தலைமை நீதிபதியாக சூரியகாந்தை நியமனம் செய்து, ஜனாதிபதி திரௌபதி முர்மு அறிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக உள்ள பி.ஆர்.கவாய், வரும் 23-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனால், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக உள்ள சூரியகாந்தை புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்து, கவாய், கடந்த வாரம் ஜனாதிபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

News October 30, 2025

BREAKING: CBSE பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

image

2025 – 2026 கல்வியாண்டுக்கான CBSE 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் 17.02.2026 அன்று பொதுத்தேர்வானது தொடங்க உள்ளது.

News October 30, 2025

PAK எல்லையில் இந்திய முப்படைகள் பயிற்சி

image

பாகிஸ்தான் எல்லையில் இந்திய முப்படைகள் ‘திரிசூல்’ பயிற்சியை தொடங்கியுள்ளன. குஜராத் – ராஜஸ்தான் இடையே, குறிப்பாக ரான் ஆஃப் கட்ச் பகுதியில் 12 நாள்கள் தொடர்ந்து இப்பயிற்சி நடைபெற உள்ளது. குஜராத்தில் உள்ள சர்ச்சைக்குரிய சர் கிரீக் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்கும் நிலையில், இந்திய ராணுவம் பயிற்சியை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!