News October 30, 2025

பழனி அருகே லாரி – பைக் மோதி ஒருவர் பலி

image

பழனியை அடுத்த மொல்லம்பட்டி பைபாஸ் அசோக் லைலாண்ட் ஷோரூம் அருகே இன்று விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனம் லாரி மோதியதில், இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பழனி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News October 30, 2025

திண்டுக்கல் காவல்துறையின் விழிப்புணர் புகைப்படம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினம்தோறும் சமூக வலைதளங்களில் விழிப்புணர் புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல் (அக்டோபர் 30) இன்று, வேலை வாங்கி தருவதாக கூறி இணையத்தில் வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்ற விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது.

News October 30, 2025

திண்டுக்கல்: நாளை கடைசி! APPLY NOW

image

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு மின் விநியோகக் கழகத்தில் நிறுவன செயலாளர் (ACS/FCS) மற்றும் இடைநிலை நிறுவன செயலாளர் ஆகிய பதவிகள் நிரப்படவுள்ளது. மாத சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.1,00,000 வரை வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை (31.10.2025) கடைசி நாள் ஆகும். இந்த தகவலை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News October 30, 2025

திண்டுக்கல்: சொந்த வீடு வேணுமா?

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!