News October 30, 2025

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

image

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் பேருந்து நிலையம் அருகே நேற்று (அக்.29) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் அச்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News October 30, 2025

அரியலூர்: 4,645 யூனிட்ஸ் இரத்தம் சேகரிப்பு

image

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இரத்த மையத்தில், கடந்த ஆண்டு 4,645 யூனிட்ஸ் இரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. அதனைக்கொண்டு 7,000 மேற்பட்ட இரத்தம் மற்றும் இரத்த கூறுகள் மருத்துவமனை உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள், எலும்பு அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, அவசர அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News October 30, 2025

அரியலூர்: ஆட்டோ வாங்க 3 லட்சம் கடன் உதவி

image

அரியலூர் மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.

News October 30, 2025

அரியலூர்: இனி எதற்கும் அலைய வேண்டாம்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 1.பான்கார்டு: NSDL
2.வாக்காளர் அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in
4.பாஸ்போர்ட்: Passport Seva ஆகிய இணையதளங்களில் விண்ணப்பியுங்க.
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!