News October 30, 2025
ஆணவக்கொலைக்கு எதிராக பேசும் டியூட்: திருமாவளவன்

‘Dude’ படம் ஆணவக்கொலைக்கு எதிராக பேசுகிறது என திருமாவளவன் ரிவ்யூ கூறியுள்ளார். தனக்கு துரோகம் இழைத்துவிட்டாள் என்று பழிவாங்க நினைக்காமல், அவள் விரும்புகிறவனோடு வாழட்டும் என்று அவளுக்காக போராடுவது புதிய அணுகுமுறை எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்தப் படம் அடுத்த தலைமுறைக்கான தவறான எடுத்துக்காட்டு என மோகன் ஜியும், கலாசார சீரழிவு என பேரரசும் கூறியிருந்தனர். நீங்க படம் பார்த்துட்டீங்களா?
Similar News
News October 30, 2025
வரலாற்றில் முதல் இந்திய பெண்.. புனே பெண் சாதனை!

சர்வதேச மோட்டார்ஷிப் சாம்பியன்ஷிப்பில் Ferrari காரை ஓட்டும் முதல் இந்திய பெண் என்ற பெருமையை புனேவை சேர்ந்த டயானா பூண்டோல்(32) நவம்பர் 2025 முதல் ஜனவரி 2026 வரை Middle East-ல் நடைபெறும் Ferrari Club Challenge தொடரில் அவர் பங்கேற்கிறார். Ex- ஸ்கூல் டீச்சரான டயானா, 2024-ல் the MRF Saloon Cars Championship தொடரில், நாட்டின் முன்னணி ஆண் ரேஸர்களை தோற்கடித்து பட்டம் வென்றிருந்தார்.
News October 30, 2025
33 நாள்களாக நெல் கொள்முதல் இல்லை: அன்புமணி

நெல் கொள்முதல் குறித்து அரசு பதிலளித்தாலும், எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், வட மாவட்டங்களில் 33 நாள்களாக நெல் கொள்முதல் நடைபெறவில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கொள்முதல் சிறப்பாக நடைபெறுவதாக பேசும் CM-க்கு, இதுபற்றி தெரியவில்லையா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வட மாவட்டங்கள் வேறு பகுதியில் இருப்பதாக CM நினைக்கிறார் போல என்றும் விமர்சித்துள்ளார்.
News October 30, 2025
இளம் கிரிக்கெட் வீரர் மரணம்

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் பாலால் அடிபட்ட இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழந்துள்ளார். மெல்போர்னில் உள்ள Ferntree Gully கிரிக்கெட் கிளப்பில் பென் ஆஸ்டின்(17), பயிற்சியில் ஈடுபட்டபோது, பவுலிங் மெஷின் வீசிய பால் அவரின் கழுத்தில் வேகமாக அடித்துள்ளது. ஆஸ்டின் ஹெல்மெட் அணிந்திருந்தபோதும், பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், ஆஸ்டின் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


