News October 30, 2025
புதுவை: கத்தியை காட்டி மிரட்டல்-வாலிபர் கைது!

புதுவை மேட்டுப்பாளையம் உதவி ஆய்வாளர் கோவிந்தன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது, முத்திரையர்பாளையம் காந்தி வீதியில் ஒருவர் கத்தியைக் காட்டி பொதுமக்களை மிரட்டி வருவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார், ரகளையில் ஈடுபட்ட முத்திரையர்பாளையத்தைச் சேர்ந்த முருகன் (30) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் வைத்திருந்த கத்தியையும் பறிமுதல் செய்தனர்.
Similar News
News October 30, 2025
புதுவை: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

புதுவை மக்களே Gpay, Phonepe, paytm தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News October 30, 2025
காரைக்காலில் அரசு சார்பில் கலை நிகழ்ச்சி ஏற்பாடு

புதுச்சேரி கலை பண்பாட்டுத் துறையின் சார்பாக 01-11-2025 அன்று மாலை 6 மணிக்கு காரைக்கால் அம்மையார் கலையரங்கத்தில், கிராமிய கலை நிகழ்ச்சியும், பரத நாட்டிய நிகழ்ச்சியும், இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இதில் புதுச்சேரி அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கலை நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டுக்களித்து சிறப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News October 30, 2025
புதுவை: உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ?

புதுவை மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் மத்திய அரசின் <


