News October 30, 2025
விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்

முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை உள்ளிட்ட 7 ஒன்றியங்களிலுள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், பசும்பொன்னில் அமைத்துள்ள தேவர் நினைவிடத்தில் இன்று CM ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தவுள்ளனர்.
Similar News
News October 30, 2025
இளம் கிரிக்கெட் வீரர் மரணம்

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் பாலால் அடிபட்ட இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழந்துள்ளார். மெல்போர்னில் உள்ள Ferntree Gully கிரிக்கெட் கிளப்பில் பென் ஆஸ்டின்(17), பயிற்சியில் ஈடுபட்டபோது, பவுலிங் மெஷின் வீசிய பால் அவரின் கழுத்தில் வேகமாக அடித்துள்ளது. ஆஸ்டின் ஹெல்மெட் அணிந்திருந்தபோதும், பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், ஆஸ்டின் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
News October 30, 2025
சொந்த நாடு திரும்ப ஆசைப்படும் ஷேக் ஹசீனா

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு போராட்டம் வெடித்ததால் நாட்டை விட்டு வெளியேறி டெல்லியில் ஷேக் ஹசீனா அடைக்கலம் புகுந்தார். இந்நிலையில், டெல்லியில் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருப்பதாகவும், ஆனால் சொந்த நாட்டுக்கு திரும்ப ஆசைப்படுவதாகவும் கூறினார். மேலும், வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சிக்கு தடைவிதித்தது பெரும் அநீதி என்ற அவர், தேர்தல் நியாமான முறையில் நடக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
News October 30, 2025
ரயில்வே வேலை வேணுமா? 5,810 Vacancies; முந்துங்க

ரயில்வேயில் காலியாக உள்ள நான்-டெக்னிக்கல் (NTPC) பதவிகளில் 5,810 பணியிடங்களுக்கான அறிவிப்பை RRB வெளியிட்டுள்ளது. அதன்படி சீனியர் கிளர்க், அசிஸ்டென்ட் ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பல பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நவ.20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 18-33 வயதிற்குள் இருக்க வேண்டும். இங்கே <


