News October 30, 2025

திருப்பதி சால்வை கொள்முதலில் முறைகேடா?

image

திருப்பதி கோயிலுக்கு வரும் VVIP-களுக்கு சால்வை அணிவிப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், இந்த சால்வை கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ₹400 மதிப்புள்ள சால்வையை ₹1,300-க்கு வாங்கியதாக கணக்கு காட்டி, ₹50 லட்சம் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இது தொடர்பாக புலனாய்வு விசாரணை நடத்த, கோயில் அறங்காவலர் குழு உத்தரவிட்டுள்ளது.

Similar News

News November 1, 2025

50 விநாடி விளம்பரத்திற்கு ₹5 கோடி சம்பளம்

image

50 விநாடிகள் ஓடும் டாடா ஸ்கை விளம்பரத்தில் நடிக்க, நயன்தாரா ₹5 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் நடிக்க ₹10 – ₹15 கோடி சம்பளம் பெறும் நிலையில், விளம்பரத்தில் நடிக்க அவர் வாங்கும் சம்பளம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையான நயன்தாராவின் கைவசம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிப்படங்கள் உள்ளன.

News November 1, 2025

வங்கி கணக்கில் ₹2000… உடனே இதை செக் பண்ணுங்க!

image

PM கிசான் உதவித் திட்டத்தின் 21-வது தவணை நவம்பர் முதல் வாரத்தில் தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த தொகையை பெற 3 விஷயங்களை கட்டாயம் செய்திருக்க வேண்டுமாம்: 1) <<17118116>>e-KYC<<>> செய்வது கட்டாயம் 2)நில சரிபார்ப்பு நடைமுறை முழுமையடைய வேண்டும் 3)‘<<18007483>>தனித்துவ விவசாய அடையாள அட்டை<<>>’ பெற்றிருக்க வேண்டும். இவற்றை செய்து முடித்துவிட்டீர்களா? SHARE IT

News November 1, 2025

ஆந்திரா கோயில் கூட்டநெரிசல்: மாறிமாறி குற்றச்சாட்டு

image

ஆந்திரா <<18168110>>கோயில் கூட்டநெரிசலுக்கு<<>> காரணமான ஏகாதசி நிகழ்ச்சி குறித்து, கோயில் நிர்வாகம் போலீஸ், உள்ளூர் அதிகாரிகளிடம் கூறவில்லை என அம்மாநில CM சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்து இருந்தால், கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், இது நிர்வாக திறமையின்மையை காட்டுவதாக அம்மாநில EX CM ஜெகன் மோகன் சாடியுள்ளார்.

error: Content is protected !!