News April 18, 2024

சென்னை கேசவ பெருமாள் தேரோட்டம்

image

ஏப்ரல் 18 வியாழக்கிழமை குமாரசாமிபேட்டை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சென்னை கேசவ பெருமாள் தேரோட்டம் நடைபெற்றது. பெருமாளுக்கு புதியதாக வடிவமைக்கப்பட்ட தேரில் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது சாமிக்கு சிறப்பு பூஜைகளும், மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் காலையில் பக்தர்கள் நிலை பெயர்த்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

Similar News

News February 18, 2026

தருமபுரியில் ஒலிம்பியாட் சேம்பியன்ஷிப் விருது

image

தருமபுரியில் ஒலிம்பியாட் சேம்பியன்ஷிப் விருது வழங்கும் விழா நேற்று (பிப்.17) நடைபெற்றது. இதில் தருமபுரி கலெக்டர் சதீஷ் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி மாணவர்களுக்கு சாம்பியன்ஷிப் கோப்பைகளை வழங்கினார். அரசு பள்ளிகளைச் சேர்ந்த 120 மாணவர்கள் உட்பட சுமார் 700 மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் ரெ.சதீஷ் சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

News February 18, 2026

தருமபுரியில் EB பில் எகிறுதா..?

image

தருமபுரி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <>இங்கு கிளிக்<<>> செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 18, 2026

தருமபுரியில் வாலிபர் துடிதுடித்து பலி!

image

பென்னாகரம், மங்கம்பட்டியை சேர்ந்தவர் ராகேஷ் (19). இவர் உத்தனப்பள்ளியில் வேலை செய்து வந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் சிகிச்சை பெற்றும் குணமாகத்தால் மனமுடைந்து காணப்பட்டார். இதனால் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த இவர், கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராகேஷ் இறந்தார். இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!