News October 30, 2025
ராகுல் பேசும்போதெல்லாம் தாமரை மலர்ந்தது: அமித்ஷா

ஓட்டுக்காக PM மோடி டான்ஸ் கூட ஆடுவார் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த பேச்சுக்கு தேர்தலில், ராகுல் விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். மோடியின் தாயாரை ராகுல் அவமதித்தார், பலமுறை இழிவான முறையில் பேசியுள்ளார் என்றும் கூறினார். ஆனால், ராகுல் இவ்வாறு இழிவாக பேசும் ஒவ்வொரு முறையும் தாமரை மலர்ந்துள்ளது என்று அமித்ஷா தெரிவித்தார்.
Similar News
News November 1, 2025
திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்: விஜய்

தமிழ்நாடு உருவாக காரணமான எல்லை போராட்ட தியாகிகளையும், ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்ட காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம் என விஜய் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவிடம் இருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம் எனவும் 2026-ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம் என்றும் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 1956 நவ.1-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 1, 2025
ஆந்திரா, கேரளா, கர்நாடகா பிறந்த தினம் இன்று!

மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிறமொழி பேசும் பகுதிகள் பிரிந்து சென்ற நாள் இன்று. கேரளா, கர்நாடகா, ஆந்திரா அப்போது சென்னை மாகாணத்தோடு இணைந்தே இருந்தன. மொழிவாரி மாநிலங்கள் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அதன் எதிரொலியாக, 1956-ம் ஆண்டு நவ.1-ம் தேதி முதல் மொழிவாரி மாநிலங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் உருவாயின.
News November 1, 2025
உலகின் மிகவும் கஷ்டமான பரீட்சைகள் இவைதான்!

எக்ஸாம் என்றாலே நம்மில் பலருக்கும் கஷ்டம்தான். ஆனால், எவ்வளவு கஷ்டப்பட்டு படித்தாலும், பாஸ் பண்ணுவதற்கு மிகவும் கடினமான பரீட்சைகளும் உலகில் நடத்தப்பட்டு வருகின்றன. அப்படி உலகின் டாப் 9 கடினமான பரீட்சைகளை கொடுத்துள்ளோம். அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe செய்யுங்க. நீங்க எழுதிய கஷ்டமான எக்ஸாம் எது?


