News October 30, 2025
புத்த, சமண, சீக்கிய மதத்தினர் யாத்திரை செல்ல மானியம்

திருவள்ளூர்: தமிழ்நாட்டைச் சார்ந்த 50 புத்த மதத்தினர் 50 சமண மதத்தினர் 20 சீக்கிய மதத்தினர் யாத்திரை மானியமாக சுமார் ஒரு நபருக்கு ரூ10,000விதம் 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பயன்பெற நவ.30ம் தேதிக்குள் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் மனுக்களை பதிவிறக்கம் செய்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News November 1, 2025
திருவள்ளூர் மாவட்ட மீனவர்களுக்கு தடை

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை (நவ.2 ந்தேதி), மாலை தொலைத்தொடர்புக்கான LVM3-M5 என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. எனவே பழவேற்காடு உள்பட திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் நாளை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
News November 1, 2025
திருவள்ளூர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<
News November 1, 2025
திருவள்ளூர்: 3 மாதத்தில் பிரச்னைகள் தீர்க்கும் கோயில்

திருவள்ளூர் மாவட்டம் , திருப்பாசூர் கிராமத்தில் அமைந்துள்ளது வாசீஸ்வர சுவாமி கோயில். இது, அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் ஆகியோரால் பாடப்பட்ட சிறப்பினைக் கொண்ட கோயில். 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயில் இரண்டாம் கரிகால சோழனால் கட்டப்பட்டது. 11 விநாயகர்கள் எழுந்தருளியிருக்கும், விநாயகர் சபை ஒன்றும் உள்ளது. விநாயகரை வழிபட்டால் அனைத்து பிரச்னைகளும் மூன்று மாதத்தில் தீரும் என்பது ஐதீகம்.


