News October 30, 2025
தூத்துக்குடி: வடகிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டம்

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து நேற்று வடகிழக்கு பருவ மழை தொடர்பாக மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 1, 2025
தூத்துக்குடி: ரயில்வேயில் 2,569 காலியிடங்கள்! APPLY NOW

இந்தியன் ரயில்வேயில் ஜூனியர் எஞ்சினியர், உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, டிகிரி (B.Sc.,) படித்தவர்கள் 30.11.2025-க்குள் <
News November 1, 2025
NOTE: தூத்துக்குடியில் 300க்கும் மேலான காலியிடங்கள்!

தூத்துக்குடி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் நவ. 7ம் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8 தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 300க்கும் மேலான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10, 12, ITI, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் கல்வி சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம். இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க. வேலை தேடும் ஒருவருக்காவது உதவும்.
News November 1, 2025
தூத்துக்குடியில் 3 பேர் மீது குண்டாஸ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த அக். 6ல் குலசைப் பகுதியில் நடந்த கொலை வழக்கில் நாசரேத் பகுதியை சேர்ந்த மூர்த்திராஜா (27), குலசை முத்துச்செல்வன் (27) கைதாகினர். ஆறுமுகநேரியில் கொலை முயற்சி வழக்கில் திருச்செந்தூரை சேர்ந்த சூர்யா (23) கைதாகினார். மேற்கண்ட 3 பேரையும் மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ம் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவிட்டார்.


