News October 30, 2025

குமரியில் 95 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

image

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் 01.11.2025 காலை 11.00 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளில் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.

Similar News

News November 1, 2025

குமரி: கோவிலில் வேலை., ரூ.58,600 வரை சம்பளம்!

image

குமரி மக்களே, இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 31 இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்த மற்றும் 10th முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நவ.25க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.10,000 – 58,600 வரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு <>இங்கு கிளிக்<<>> செய்யவும். இந்த தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News November 1, 2025

வாக்காளர் பட்டியல் திருத்தல் அதிகாரிகள் நியமனம்

image

குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்துவதற்காக தொகுதி வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி – மாவட்ட வழங்கல் அலுவலர் புஷ்பா தேவி, நாகர்கோவில் – ஆர்டிஓ காளீஸ்வரி, குளச்சல் – ஆதி திராவிடர் நல அலுவலர் மோகனா, பத்மநாபபுரம் -சப் கலெக்டர் வினை குமார் மீனா, விளவங்கோடு – பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் செந்தூரான், கிள்ளியூர் – ஆயம் உதவி ஆணையர் ஈஸ்வர நாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News November 1, 2025

குமரியில் இந்த நாளில் உள்ளூர் விடுமுறையா?

image

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21ஆம் தேதி உலக மீனவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர் தினத்தை கொண்டாடும் வகையில் உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று தெரிவித்தார்.

error: Content is protected !!