News October 30, 2025

₹441 லட்சம் கோடி.. உலகின் NO.1 நிறுவனமான Nvidia

image

உலகின் முதல் $5 டிரில்லியன் (₹441 லட்சம் கோடி) சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக Nvidia உருவெடுத்துள்ளது. அதுவும் முதல் $4 டிரில்லியன் மதிப்பு கொண்ட நிறுவனமாக உருவெடுத்த 3 மாதங்களில் இந்த சாதனையை படைத்துள்ளது. கிராஃபிக்ஸ் சிப் தயாரிப்பில் இருந்து AI சிப் தாயாரிப்புக்கு மாறியதில் இருந்து Nvidia-ன் பங்குகள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, 2022-ல் OpenAI தொடங்கியது முதல் அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது.

Similar News

News October 30, 2025

கரூரில் தவெகவினர் தாக்கப்பட்டனர்: CTR

image

கரூர் துயரம் நடந்த முதல் நாளே தானும், N.ஆனந்த் உள்ளிட்ட அனைவரும் கரூருக்கு வெளியே காத்திருந்ததாக CTR நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். ஆனால், போலீஸார் தங்களை அனுமதிக்கவில்லை என்றும், தவெக கொடி கட்டிய வாகனங்களுக்கு ஊருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது எனவும் கூறினார். அத்துடன், அனைத்து தவெக நிர்வாகிகளும் தாக்கப்பட்டு, அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

News October 30, 2025

அக்டோபர் 30: வரலாற்றில் இன்று

image

*1502 – வாஸ்கோடகாமா 2-வது முறையாக கோழிக்கோடு வந்தார்.
*1945 – ஐநாவில் இந்தியா இணைந்தது.
*1908 – தேவர் ஜெயந்தி.
*1966 – ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான KV ஆனந்த் பிறந்தநாள்.

News October 30, 2025

ஜெயிலர் 2-ல் இணைந்த சந்தானம்

image

காமெடியனாக கலக்கிய சந்தானம், தற்போது ஹீரோவாகவே நடித்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் காமெடியனாக அவர் நடிக்கவுள்ளார். ‘ஜெயிலர் 2’ மூலமே மீண்டும் அந்த என்ட்ரியை சந்தானம் கொடுக்கவுள்ளார். ரஜினிகாந்த் உடன் ஏற்கெனவே ‘லிங்கா’ படத்தில் சந்தானம் காமெடி ரோலில் நடித்திருந்தார். இந்த காம்போ மீண்டும் திரையில் சிரிப்பு பட்டாசாய் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!