News October 29, 2025
அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கண்காட்சி

இன்று (29.10.2025) செய்யார் வட்டம், புளியரம்பாக்கத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்ட கண்காட்சியை, ஆட்சியர் க.தர்ப்பகராஜ் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன், செய்யார் சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 1, 2025
தி.மலை : ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

தி.மலை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம்.தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News November 1, 2025
தி.மலை: தேர்வு இல்லாமல் வங்கி வேலை!

தி.மலை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <
News November 1, 2025
திருவண்ணாமலை: பிரபல நடிகை சாமி தரிசனம்

(நவ.1) திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு பிரபல திரைப்பட நடிகையான தேவயானி அவர்கள் சுவாமி தரிசனம் செய்தார். பின் அவருக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த அவரிடம் செல்பி எடுக்க விரும்பிய ரசிகர்களுடன் பொறுமையாக நின்று எடுத்தார்.


