News October 29, 2025

மழை வெளுக்கப் போகுது.. 14 மாவட்டங்களில் உஷார்!

image

தமிழகத்தின் சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்றிரவு 10 மணி வரை கோவை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், குமரி, தென்காசி, தேனி, நெல்லை, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், சிவகங்கை, திருவள்ளூர், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், இரவில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிருங்கள் நண்பர்களே!

Similar News

News October 30, 2025

CSK-வில் வாஷிங்டன் சுந்தர்? அஸ்வின் விளக்கம்

image

IPL-ல் இருந்து அஸ்வின் ஓய்வு பெற்ற நிலையில், அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்க்க CSK-வும், அவரை வாங்க GT அணியும் டிரேட் செய்ய ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதுகுறித்து தனக்கு எந்த தகவலும் வரவில்லை என்று சுந்தர் கூறியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். அதேநேரம், தன்னை வாங்குவது பற்றி CSK, GT அணிகள் பேசியிருக்கலாம் என்றும் சுந்தர் கூறியுள்ளார்.

News October 30, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 30, ஐப்பசி 13 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 130 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: நவமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: வளர்பிறை

News October 30, 2025

மியான்மர் அகதிகளுக்கு அச்சுறுத்தலா? இந்தியா மறுப்பு

image

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, இச்சம்பவத்தில் இந்தியாவில் உள்ள மியான்மர் மக்கள் அதிகாரிகளால் அச்சுறுத்தபட்டதாக, ஐநாவின் 3-வது குழு குற்றஞ்சாட்டியது. இதனை இந்தியா மறுத்துள்ளது. அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று MP திலீப் சைகியா ஐநாவில் தெரிவித்துள்ளார். மியான்மருக்கு இந்தியா செய்த உதவிகளையும், இணக்கத்தையும் அவர் எடுத்துரைத்தார். இது தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

error: Content is protected !!