News October 29, 2025
திருத்தப் பணி மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் 01.01.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு தீவிர திருத்தம் பணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா தலைமையில் இன்று (அக்.29) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Similar News
News October 30, 2025
காவல்துறை இரவு ரோந்து பணி விவரங்கள்

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தினசரி இரவு நேரங்களில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வாகன ரோந்து, கால்நடை ரோந்து என இருவிதமான பணி செய்து வருகின்றனர்.
News October 30, 2025
ஆற்காடு:மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு

இன்று (அக் -30) ஆற்காடு அடுத்த களர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சீனிவாசன் தன் நிலத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அங்கே அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த ஆற்காடு காவல்துறையினர் சீனிவாசன் உடலை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும்,இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 30, 2025
ராணிப்பேட்டை: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (அக்.30) செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. இதில் போதை மாத்திரைகள், ஊசிகள், போதை சிகரெட்டுகள் விற்பனை செய்யாதீர்கள். உங்களிடம் யாராவது வந்து கேட்டால் எங்களிடம் இல்லை என்று சொல்லுங்கள். போதை மருந்துகள் உங்கள் பணத்தை மட்டுமில்லை உங்கள் வாழ்க்கையும் சீரழிக்கும் என்று அறிவுறுத்தியுள்ளது.


