News April 18, 2024
நெஸ்லே செரிலாக்கில் சர்க்கரை சேர்ப்பு

நெஸ்லே நிறுவனம் குழந்தைகளுக்கான செரிலாக்கில் விதிகளுக்கு மாறாகச் சர்க்கரையை சேர்ப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உடல்பருமன், பிற நோய்களைத் தடுக்க பச்சிளம் குழந்தை உணவுப் பொருளில் சர்க்கரை சேர்க்கக்கூடாது என சர்வதேச வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறி, இந்தியாவில் 3 கிராம் அளவு சேர்ப்பதும், வளர்ந்த நாடுகளில் சேர்ப்பதில்லை என்றும் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Similar News
News February 11, 2026
புதுச்சேரி: வாய்க்காலில் மிதந்த சடலம்

புதுச்சேரி முத்தியால்பேட்டை பெரிய வாய்க்காலில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதை கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார், இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 11, 2026
FLASH: சர்வதேச சந்தையில் தங்கம் விலை மேலும் சரிவு

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ந்து இறங்கு முகத்தில் உள்ளது. இன்று(பிப்.11) 1 அவுன்ஸ்(28g) $19 குறைந்து $5,036-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியும் 1 அவுன்ஸ் $1 குறைந்து $81 ஆக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இந்திய சந்தையில் காலை நேர வர்த்தகத்தில் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலையில் மந்த நிலை நீடிப்பது கவனிக்கத்தக்கது.
News February 11, 2026
மீண்டும் வேகமெடுக்கும் EPS-ன் தேர்தல் பரப்புரை

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க, அரசியல் தலைவர்களும் அடுத்த கட்ட பரப்புரையை மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றனர். ஏற்கெனவே 181 தொகுதிகளில் பரப்புரையை முடித்திருந்த EPS, பிப்.15-ம் தேதி முதல் தனது தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணத்தை மீண்டும் தொடங்குகிறார். அதன்படி, 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் பவானிசாகர் தொகுதிக்கு உள்பட்ட சத்தியமங்கலத்தில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.


