News April 18, 2024
வேலூர் எம்பி வேட்பாளருக்கு பிரதமர் மோடி கடிதம்

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ஏ.சி.சண்முகம் உங்களுக்கு கடிதம் எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வேலூரில் நீங்கள் செய்த பணிக்கு உங்களை வாழ்த்துகிறேன். மக்களின் ஆசீர்வாதத்துடன் நீங்கள் பாராளுமன்றத்தை அடைவீர்கள் தேர்தலில் வெற்றி பெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
Similar News
News August 18, 2025
வேலூர் விவசாயிகளுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகளை மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவித்துள்ளார்.
News August 18, 2025
வேலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

வேலூர் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். இந்த<
News August 18, 2025
கலெக்டர் தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (18.08.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, திட்ட இயக்குநர் காஞ்சனா, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்