News October 29, 2025
BREAKING: விஜய் அதிரடி முடிவு.. அதிமுக அதிர்ச்சி

கரூர் துயர சம்பவத்திற்கு பின் அதிமுக – தவெக கூட்டணி அமையக்கூடும் என யூகங்கள் எழுந்தன. அதிமுக பரப்புரையில் தவெக கொடி பறந்தது அதற்கு மேலும் வலுசேர்த்தது. இந்நிலையில், 2026 தேர்தலில் தனித்து களம் காணவே விஜய் முடிவு செய்துள்ளார். தவெக கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என <<18140418>>CTR நிர்மல் குமார்<<>> விளக்கம் அளித்துள்ளார். திமுக, பாஜகவோடு கூட்டணி இல்லை என விஜய் உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 30, 2025
டெக்னாலஜி ஸ்டார்ட்அப்களுக்கு ₹10,000 கோடி: பியூஷ் கோயல்

FFS திட்டத்தின் மொத்த நிதியையும் (₹10,000 கோடி), அடுத்த ஆண்டில் டெக்னாலஜி சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஒதுக்க உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது, ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வெளிநாட்டு சார்பு நிலையை குறைத்து, உள்நாட்டு தொழில்நுட்ப தயாரிப்புகளை அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்தியாவை கண்டுபிடிப்புகளின் மையமாக மாற்ற பயன்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 30, 2025
தமிழ்நாட்டுக்கு SIR அவசியம்: ஜெயக்குமார்

வாக்காளர் பட்டியலில் உண்மைத்தன்மை வேண்டுமென்றால் TN-க்கு SIR அவசியம் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக ஆய்வின்படி, 2023-ல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தொகுதியிலேயே இல்லாத 40,000 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் பூத் லெவல் ஆபிசர், கட்சிகளின் ஏஜெண்ட் இணைந்து செயல்பட்டால் வெளிப்படைத்தன்மையுடன் வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்றும் அவர் பேசியுள்ளார்.
News October 30, 2025
ராசி பலன்கள் (30.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


