News October 29, 2025
ஆட்சியர் சதீஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம்

ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் (தனி) ஆகிய சட்ட மன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து அக்.29 ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொருப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் சதீஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
Similar News
News October 30, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (அக்-30) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.
News October 30, 2025
தருமபுரி அருகே பூட்டை உடைத்து 12 பவுன் நகை கொள்ளை

ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த சரிதா சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகின்றார் நேற்று அக்.29 காலை வெளியில் சென்று விட்டு மாலை வீடு திரும்பிய போது அவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோ உள்ளே இருந்த 12 பவுன் நகை 250கிராம் வெள்ளி நகை திருடப்பட்டிருந்தது. இது குறித்து மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், காவலர்கள் வழக்குப்பதிந்து கைரேகை நிபுணர்களைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 30, 2025
தருமபுரி: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.


