News October 29, 2025
கல்லூரி பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்து

வேலூரில் இருந்து திருத்தணிக்கு அரசு பேருந்து இன்று அக்.29ஆம் தேதி சென்று கொண்டிருந்தது பெருங்காஞ்சி ஏரிக்கரை பகுதியில் செல்லும் போது எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து மீது அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் கல்லூரி பேருந்தில் முன்பக்க கண்ணாடி உடைந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. சோளிங்கர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News October 30, 2025
காவல்துறை இரவு ரோந்து பணி விவரங்கள்

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தினசரி இரவு நேரங்களில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வாகன ரோந்து, கால்நடை ரோந்து என இருவிதமான பணி செய்து வருகின்றனர்.
News October 30, 2025
ஆற்காடு:மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு

இன்று (அக் -30) ஆற்காடு அடுத்த களர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சீனிவாசன் தன் நிலத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அங்கே அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த ஆற்காடு காவல்துறையினர் சீனிவாசன் உடலை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும்,இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 30, 2025
ராணிப்பேட்டை: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (அக்.30) செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. இதில் போதை மாத்திரைகள், ஊசிகள், போதை சிகரெட்டுகள் விற்பனை செய்யாதீர்கள். உங்களிடம் யாராவது வந்து கேட்டால் எங்களிடம் இல்லை என்று சொல்லுங்கள். போதை மருந்துகள் உங்கள் பணத்தை மட்டுமில்லை உங்கள் வாழ்க்கையும் சீரழிக்கும் என்று அறிவுறுத்தியுள்ளது.


