News October 29, 2025
OUT OF FORM-ல் இருக்கேனா? SKY-ன் மழுப்பல் பதில்

சர்வதேச போட்டிகளில் மோசமான ஃபார்ம் காரணமாக திணறி வருவதாக வைக்கப்படும் விமர்சனத்திற்கு இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதிலளித்துள்ளார். தற்போது இந்திய அணிக்காக கடினமாக உழைத்து கொண்டிருப்பதாக கூறிய அவர், தான் இன்னும் ஃபார்மில் இருப்பதாகவே தெரிவித்தார். மேலும், ரன்கள் அதுவாக வரும் ஆனால், அணிக்காக ஒரே இலக்கை நோக்கி நகர்வதே மிக முக்கியம் என கூறி மழுப்பியுள்ளார்.
Similar News
News October 30, 2025
தடகள வீராங்கனைக்கு ₹25 லட்சம்!

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த எட்வினா ஜேசன், பெண்கள் 400 மீட்டர் ஓட்டத்தில் 55.43 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும் பெண்கள் மெட்லி ரிலே போட்டியில் அவரது இறுதி ஓட்டம் இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை வெல்ல உதவியது. இந்நிலையில், அவருக்கு TN அரசின் ₹25 லட்சம் ஊக்கத் தொகையை, DCM உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
News October 30, 2025
உலகக்கோப்பையில் வரலாறு படைத்த SA வீராங்கனை!

மகளிர் ODI உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீராங்கனை என்ற பெருமையை தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மரிசேன் கேப் படைத்துள்ளார். அவர் 44 விக்கெட்களை வீழ்த்தி, இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமியின்(43) சாதனையை முறியடித்தார். மேலும், ODI உலகக்கோப்பை பைனலுக்கு முதல் முறையாக தகுதி பெற்ற தென்னாப்பிரிக்க அணி என்ற பெருமையையும் லாரா வோல்வார்ட் தலைமையிலான SA பெண்கள் அணி படைத்துள்ளது.
News October 30, 2025
BREAKING: பதவியை ராஜினாமா செய்கிறாரா கே.என்.நேரு?

நகராட்சி நிர்வாகம் – குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில் மோசடி நடந்துள்ளதாக ED குற்றஞ்சாட்டியுள்ளது. தேர்தல் வரவிருக்கும் நிலையில், இந்த விவகாரம் அரசியல் ரீதியாக புயலை கிளப்பியுள்ளது. இதனால், செந்தில் பாலாஜி, பொன்முடியை போலவே கே.என்.நேருவுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், கே.என்.நேரு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறுகின்றனர்.


