News October 29, 2025
ராமேஸ்வரம் – ராமநாதபுரம் ரயில் சேவை நிறுத்தம்

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் – இராமநாதபுரம் இடையே உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணி நடைப்பெறும் காரணத்தினால் இன்று, அதிகாலை 6:50 மற்றும் காலை 11:40 மணி அளவில் இருந்து இயக்கப்படும் தினசரி ரயில்கள் நவம்பர் 1ம் தேதி சனிக்கிழமை வரை இராமநாதபுரம் வழித்தட தண்டவாளத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. SHARE
Similar News
News November 1, 2025
கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு நன்றி

ராமநாதபுரம் நகரில் இறந்தோரின் உடலை அடக்கம் செய்ய கபர்ஸ்தான் இடம் கோரி சிறுபான்மையினர் குழு, திமுக சிறுபான்மையினர் நலக்குழு உறுப்பினர்களிடம் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, ஜமாத்தாருடன் இணைந்து கடந்த வாரம் மனு அளித்தார். இதற்கு இடம் ஒதுக்கி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். ஒரே வாரத்தில் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சரை ஜமாத்தார் இன்று சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
News November 1, 2025
ராம்நாடு: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

ராமநாதபுரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1.<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News November 1, 2025
ராமேஸ்வரம் கோயில் பெயரில் போலி வெப்சைட் மோசடி

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பெயரில் போலி வெப்சைட் உருவாக்கி பக்தர்களை ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது. இதன் பெயரில் 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் எஸ்.பி-க்கு கோயில் இணை ஆணையர் புகார் அனுப்பியுள்ளார். போலி ஏஜென்ட் வெப்சைட் மூலம் குஜராத் சேர்ந்த குடும்பம் ரூ.1.6 லட்சம் செலுத்தி ஏமாற்றப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.


