News April 18, 2024
புதுவை பைனான்சியர் வீட்டில் ரூ.1 கோடி பணத்தை பறிமுதல்

புதுவை 100 அடி ரோடு ஜான்சி நகரில் முருகேசன் பைனான்சியர் என்பவர் வீட்டில் பணம் பதுக்கி வைத்து இருப்பதாக தேர்தல் பறக்கும் படைக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்று சோதனை நடத்தி உரிய ஆவணம் இல்லாமல் இருந்த ரூ.2 ஆயிரம், ரூ.500 நோட்டு என ரூ.1 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் செல்லாத ரூ.2 ஆயிரம் நோட்டை ரூ. 1 கோடி அளவில் வைத்திருப்பது ஏன் என்றும் விசாரணை நடைபெறும் என தெரிகிறது.
Similar News
News April 19, 2025
புதுவை: கோடை விடுமுறைக்கு ஏற்ற இடம்

புதுவையில் ஊசுட்டேரி கிராமத்தில் பழங்குடி இன தாவரங்கள் விலங்குகள் என இயற்கையின் பாரம்பரியத்துடன் இருப்பதுதான் ஊசுட்டேரி சதுப்புநிலம். இங்கு பசுமையான சூழலில் வியக்கும் அழகோடு இந்த ஏரியில் படகு சவாரி செய்தும். இயற்கையின் அழகியலை புகைப்படங்களாக பதிவு செய்யவும் இந்த கோடை விடுமுறையில் மக்கள் வருகின்றனர். 390 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள இந்த ஏரி நம்மை நிச்சயம் இயற்கையின் அழகில் திகைக்க வைக்கும். SHARE IT.
News April 19, 2025
புதுச்சேரியில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி கடற்கரை சாலை மற்றும் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள தனியார் ஹோட்டல்களுக்கு ஈ மெயில் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் கொண்டு சோதனை மேற்கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், துணை நிலை ஆளுநர் மாளிகைக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
News April 19, 2025
புதுச்சேரி: நீங்களும் Way2News-இல் நிருபர் ஆகலாம்!

புதுவை மக்களே உங்கள் பகுதியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை, செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள், கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். ரிப்போர்ட்டராக பதிவு செய்ய <