News October 29, 2025
திண்டுக்கல் வீட்டில் நுழைந்த உடும்பு!

திண்டுக்கல் மா, 23வது வார்டு ஆர்,வி.நகர் பகுதி உள்ளது. இப்பகுதியில் மதுரை வீரன் கோவில் எதிரே உள்ள வீட்டில் (அக்.29) இன்று காலை உடம்பு ஒன்று நுழைந்தது. இதைக் கண்ட குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்தனர். மேலும் திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடும்பை உயிருடன் பத்திரமாக பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News October 30, 2025
திண்டுக்கல் கலெக்டர் அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தின் அனைத்து 306 கிராம ஊராட்சிகளிலும் 01.11.2025 (சனிக்கிழமை) நாளை மறுநாள் முற்பகல் 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. மக்கள் அனைவரும் தங்கள் ஊராட்சியில் நடைபெறும் கிராம சபைகளில் தவறாமல் கலந்து கொண்டு, ஊரின் முன்னேற்றம் குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News October 30, 2025
திண்டுக்கல் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்!

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் இரவு 11 மணி முதல் வியாழக்கிழமை நாளை காலை 6 மணி வரை, நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 29, 2025
திண்டுக்கல்: நாளை “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

மக்களின் குறைகளை நேரில் கேட்டு தீர்க்கும் நோக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (30.10.2025) நடைபெறுகிறது. மாவட்டத்தின் ஆத்தூர் தொகுதியில் குத்துக்காடு பொது மைதானம், நத்தம் தொகுதியில் குட்டுப்பட்டி மந்தை திடல், தொப்பம்பட்டி வட்டாரத்தில் மேல்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, ரெட்டியார்சத்திரம் தொகுதியில் சீலைக்காரி அம்மன் மண்டபம்


