News April 18, 2024

ஆட்சியர் ஆணையை அமல்படுத்தும் வணிகர்கள்

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் ஆணைப்படி நாளை தேர்தல் நாளன்று வணிக, வர்த்தக நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுகிறது என்றும் நாமும் நம்மிடம் பணிபுரியும் ஊழியர்களும் ஜனநாயக கடமையை ஆற்றிட வழிவகை செய்திட வேண்டும் என்றும் நாகப்பட்டினம் இந்திய வர்த்தக தொழிற் குழுமம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 18, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கிய ஆட்சியர்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைப்பெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியினை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி, மாவட்ட ஆசிரியர் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணன், தனி துணை ஆட்சியர் பரிமளாதேவி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

News August 18, 2025

சிறப்பு ரயில்களுக்கு நாளை முதல் முன்பதிவு

image

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, சென்னை, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை (ஆக.19) காலை 8 மணிக்கு தொடங்கும் என தென்னக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

News August 18, 2025

வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள்

image

வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம் விழுப்புரம் கடலூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு ஆகஸ்ட் 28, செப்.4, 11 ஆகிய தேதிகளிலும் மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணி – தாம்பரம் இடையே ஆகஸ்ட் 29, செப்.5, 12 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

error: Content is protected !!