News October 29, 2025
தருமபுரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தருமபுரி, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www. Dharmapuri.nic.in முகவரியில் பதிவேற்றம் செய்து பூர்த்தி செய்து வருகிற நவ.17 மாலை 5 மணிக்குள், தருமபுரி மாவட்ட பழைய ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில், சமர்ப்பிக்க வேண்டும் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதிஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 30, 2025
தருமபுரி: சுகாதார துறையில் 1,400 காலியிடங்கள் APPLY NOW!

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் 1,429 சுகாதார ஆய்வாளர் (நிலை 2) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 12 ஆம் வகுப்பு மேல் படித்திருந்த 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.19,500 – ரூ.71,900, வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News October 30, 2025
அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி

தருமபுரி மாவட்டத்திலுள்ள 17 வயதிற்கு மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியில் பங்கேற்று தங்கள் விளையாட்டுத்திறனை மேம்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் ரெ.சதீஸ் அக்.29 இன்று தெரிவித்துள்ளார்கள்.
News October 30, 2025
தொப்பூர் கணவாயில் கோர விபத்து!

தொப்பூர் கணவாயில் நேற்று (அக்.29) சேலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஆண் ஒருவர் மீது பின்னால் வந்த கார் இடித்ததில் கோர விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் சென்றவர் தர தரவென இழுத்து செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின் வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.


