News October 29, 2025

இந்தியாவின் அதிரடியை தடுத்த மழை

image

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான <<18140028>>முதல் டி20 போட்டி<<>> மழையினால் மீண்டும் தடைபட்டுள்ளது. சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க, 9.4 ஓவர்களில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்துள்ளது. ஏற்கெனவே மழையினால் ஆட்டம் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 1, 2025

திமுகவுக்கு ஆதரவாக செங்கோட்டையன்: EPS

image

OPS, TTV அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அல்ல; நீக்கப்பட்டவர்கள் என EPS விளக்கமளித்துள்ளார். திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக OPS, TTV உடன் இணைந்து செங்கோட்டையன் சதி செய்தால் தலைமைக் கழகம் வேடிக்கை பார்க்குமா எனக் கேள்வி எழுப்பிய அவர், சிற்றரசர் போல் நடந்து கொண்ட அவரை நீக்கியதால், கோபியில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர் என தெரிவித்தார்.

News November 1, 2025

தமிழகத்திற்கு 87 புதிய 108 ஆம்புலன்ஸ்கள்!

image

பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். குறிப்பாக, ₹18.9 கோடி செலவில் 87 புதிய 108 ஆம்புலன்ஸ் சேவைகளை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக CM ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் அமையவுள்ள சுற்றுச்சூழல் பூங்காவுக்கான பணிகளையும் தொடங்கி வைத்தார்.

News November 1, 2025

தென்மாவட்டங்களுக்கு சிறப்பு தேர்தல் குழு அமைக்கும் NDA

image

தென்மாவட்டங்களுக்கு என தனியாக சிறப்பு தேர்தல் குழுவை அமைக்க அதிமுக – பாஜக திட்டமிட்டுள்ளது. பசும்பொன்னில் சசிகலா, டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் ஒன்றிணைந்தனர். இதனையடுத்து, நேற்று நயினார் வீட்டில் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில், தென்மாவட்டத்தில் வாக்குகளை சிதறவிடாமல் தடுக்கவும், அதிக இடங்களை கைப்பற்றும் வகையிலும் NDA, சிறப்பு தேர்தல் குழுவை அமைக்கிறது.

error: Content is protected !!