News October 29, 2025
சேலம்: பொதுமக்கள் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில், காவல்துறை இயக்குநர் உத்தரவின்படி இன்று (29.10.2025) சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்களின் மனுக்கள் தொடர்பான சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல், இ.கா.ப., நேரில் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
Similar News
News October 29, 2025
சேலம்: முகாம்களில் பெறப்பட்ட மொத்த மனுக்கள்!

சேலத்தில் கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி உங்களுக்கான ஸ்டாலின் முகாம் தொடங்கப்பட்டது. அதன்படி 60 நாட்கள் நடைபெற்ற இந்த 366 முகாமில் வகைப்படுத்தப்பட்ட மனுக்களாக 79,199, இதர பிரச்சனைகளுக்காக 47,110 மனுக்கள் என மொத்தம் 1,26,309 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி கலைஞர் உரிமைத்தொகைக்காக மட்டும் 1,37,547 மக்கள் பெறப்பட்டது ஆக மொத்தம் 2,63,856 மனுக்கள் சேலத்தில் மட்டும் பெறப்பட்டுள்ளது.
News October 29, 2025
சேலம்: சர்வதேச முதியோர் தின விழா கொண்டாட்டம்!

ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள நேச கரங்கள் ஆதரவு முதியோர் இல்லத்தில் சர்வதேச முதியோர் தின விழா கொண்டாடப்பட்டது. முதியோர் தினம் என்பது நம் சமூகத்தின் மூத்த குடிமக்களுக்கு அன்பு நன்றி செலுத்துவது என்ற அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி சென்று முதியோர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்து அவர்களுடன் உணவு அருந்தி வாழ்த்து தெரிவித்து கொண்டாடினார்.
News October 29, 2025
சர்வதேச முதியோர் தின விழா கொண்டாட்டம்!