News October 29, 2025

திண்டுக்கல் காவல்துறை சமூக வலைதள அறிவுரை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவுறுத்தல் (அக்.29) வழங்கியுள்ளனர். வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துவது, மது அருந்தி வாகனம் ஓட்டுவது மற்றும் அதிவேகத்தில் செலுத்துவது போன்றவை விபத்துக்கு காரணமாகின்றன என்பதால், இத்தகைய செயல்களை தவிர்த்து பாதுகாப்பாக பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News November 1, 2025

பழனி அருகே லாரி-கார் மோதல்: ஒருவர் பலி

image

பழனியை அடுத்த சாமிநாதபுரம் சோதனைச் சாவடி அருகே லாரி-கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். முன்பாக சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதாகப் கூறப்படுகிறது. பின்னால் வந்த கார் அதில் மோதியதில், கார் ஓட்டுநர் பசும்பொன்னையைச் சேர்ந்த கஜேந்திரமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயம் அடைந்து பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சாமிநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 1, 2025

திண்டுக்கல்: ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி!

image

சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில், ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சி இன்று (01.11.2025) நடைபெற்றது. இந்தப் பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் அ. பிரதீப் அவர்கள் நேரில் பார்வையிட்டார். காவலர்களின் பயிற்சி செயல்பாடுகளை ஆய்வு செய்து, காவலர்களிடம் அவர்களின் தேவைகள் மற்றும் குறைகள் குறித்து கேட்டறிந்து, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

News November 1, 2025

திண்டுக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி?

image

திண்டுக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!