News October 29, 2025
திருச்சி: தொழிலாளர் நல நிதி செலுத்த அவகாசம் நீட்டிப்பு

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து நிறுவனங்களும் தங்களிடம் பணி புரியும் தொழிலாளர்களுக்கான நல நிதியை செலுத்த, வரும் 31.01.2026 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். மேலும் தொழிலாளர்களின் உதவித்தொகை கேட்பு விண்ணப்பங்களை வரும் டிச.31-ம் தேதிக்குள் இணையம் மூலமாகவோ, நல வாரிய அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டோ வழங்கி பயன்பெறலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 30, 2025
திருச்சி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 கிராம ஊராட்சிகளிலும் வரும் நவ.1ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News October 29, 2025
எஸ்பி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் எஸ்பி செல்வநாகரத்தினம் தலைமையில், இன்று நடைபெற்றது. இக்கூட்த்தில், மனு கொடுக்க வந்திருந்த பொதுமக்களிடமிருந்து மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக பெற்று குறைகளை கேட்டறிந்ததுடன், மனுக்கள் மீது துரிதமாக விசாரணை மேற்கொண்டு உரியநடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவலர்களூக்கு உத்தரவிட்டார்.
News October 29, 2025
திருச்சி: இ-ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிப்பது எப்படி?

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <


