News October 29, 2025
வேலூர் எஸ்பி தலைமையில் குறை தீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (அக்.29) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 1, 2025
வேலூர் : இருசக்கர வாகனம் மோதி விபத்து!

வேலூர் மாவட்டம் மீன் மார்க்கெட் அருகே (அக்.31) நேற்று இரவு 9:00 அளவில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 1, 2025
வனப்பகுதியில் மண் சாலை அமைத்தவர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதிக்குள் அனுமதி இல்லாமல் மண் சாலை அமைத்த விவகாரத்தில் இன்று (அக்.31) சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். வேலூர் வன அலுவலர் அசோக்குமார் உத்தரவின் பேரில் வன சரகர் சுப்பிரமணியன் தலைமையில் சைனகுண்டா காப்பு காடு பகுதியில் ரோந்து சென்ற வனத்துறை, ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும், ராஜ்குமாருக்கு ₹1 லட்சம் அபராதம் விதித்தது.
News November 1, 2025
வேலூர்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

வேலூர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.


