News October 29, 2025
சென்னை: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in , என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 29, 2025
சுரங்க பாதையில் தண்ணீர் தேக்கம் இல்லை: மாநகராட்சி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சென்னையில் உள்ள போக்குவரத்து சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க, மாநகராட்சி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சென்னையில் நேற்று காலை நிலவரப்படி 22 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேக்கம் இன்றி போக்குவரத்து சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 29, 2025
சென்னை ஒன் மூலம் பஸ் பாஸ்

சென்னை ஒன் செயலியின் வெற்றியைத் தொடர்ந்து, CUMTA மாதாந்திர டிஜிட்டல் பேருந்து பாஸ்களை அறிமுகப்படுத்த உள்ளது. நவம்பர் மத்தியில் அறிமுகமாகும் இந்த பாஸ்களின் விலை ரூ.1,000-ரூ.2,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் மாதத்திலேயே 4.6 லட்சம் பதிவிறக்கங்களைப் பெற்ற ‘சென்னை ஒன்’ செயலியின் அடுத்தகட்டமாக, டிசம்பரில் மெய்நிகர் கட்டண வாலட் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News October 29, 2025
சென்னை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். SHARE பண்ணுங்க!


