News October 29, 2025
கவுந்தப்பாடி அருகே கடனால் நேர்ந்த சோகம்

கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் தனியார் பைனான்சில் 2017-ம் ஆண்டு ரூ.8 லட்சம் கடன் பெற்றுள்ளார். மாத தவணையாக ரூ.8,000 கட்டி வந்துள்ளார். கோவிட் காலத்தில் சரிவர வேலை இல்லாததால் கடன் தொகையை கட்ட முடியாமல் சிக்கி தவித்துள்ளார். அதன் காரணமாக கடனை அடைக்க முடியாமல் புலம்பி வந்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News October 30, 2025
பால்பண்ணை தொழில் முனைவோர் பயிற்சி வகுப்பு

ஈரோடு மாவட்டத்தில் பால்பண்ணை தொழில் முனைவோருக்கான 30 நாட்கள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சி நாட்கள்: 03.11.2025 முதல் 12.12.2025 வரை நடைபெறவுள்ளது. இதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். வேலை வாய்ப்பில்லாமல் இருப்பவர்களுக்கு மட்டும் இப்பயிற்சி வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் நவ.2-ம் தேதிக்குள் முன்பதிவு செய்யவும்.
News October 30, 2025
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்

ஈரோடு மாவட்டத்தில் வரும் நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் ஏப்ரல் முதல் தற்போது வரை இல்லனா வரவு செலவுகள், பருவ மழை முன்னேற்றத்திற்கு நடவடிக்கை குறித்து விவாதிக்கலாம் என கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
News October 30, 2025
ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.


