News October 29, 2025

இராமநாதபுரம்: போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம்

image

ராமநாதபுரம், பசும்பொன் கிராமத்தில் 29, 30 ஆகிய தேதிகளில் உ.முத்துராமலிங்கத் தேவர் 63வது குருபூஜை விழா,118 ஆவது ஜெயந்தி விழாவையொட்டி போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ராமநாதபுரம், தேவிபட்டினம், ஆர் எஸ் மங்கலம், சருகனி, சிவகங்கை வழியாக மதுரைக்கு செல்ல வேண்டும். *ஷேர் பண்ணுங்க

Similar News

News November 1, 2025

ராம்நாடு: வீடு வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு

image

ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் வாக்களர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் உள்ள 12 லட்சத்திற்கும் மேலான வாக்காளர்களின் வீடுகளுக்கு 1,374 வாக்குசாவடி நிலை அலுவலர்கள் நவ. 4 முதல் டிச. 4 வரை வீடு வீடாக 3 முறை சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்க உள்ளனர் என முடிவுசெய்யப்பட்டுள்ளது.

News November 1, 2025

ராம்நாடு: கோயிலில் வேலை., ரூ.58,600 வரை சம்பளம்..

image

ராமநாதபுரம் மக்களே, இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 31 இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்த மற்றும் 10th முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நவ.25க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.10,000 – 58,600 வரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு <>இங்கு கிளிக்<<>> செய்யவும். இந்த தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News November 1, 2025

ராம்நாடு: டூவீலர் மோதி 2 வயது சிறுவன் பலி

image

இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் தேவர் குடியிருப்பை சேர்ந்த 2 வயது சிறுவன் சரவணன் தனது பாட்டியுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, சாமிதோப்பு பகுதியில் இருந்து பனைக்குளம் நோக்கி சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயம் சிறுவன் சரவணன் படுகாயமடைந்தான். சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!