News October 29, 2025
மேட்டுப்பாளையத்தில் யானை உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஜக்குனாரி பீட் ஓடந்துறை காப்புக்காடு வனப்பகுதியின் எல்லையில் உள்ள திருமலை ராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தின் அருகே உள்ள அகழியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு இன்று காலை தெரியவந்துள்ளது. விரைந்து சென்ற வனத்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே எதனால் இருந்தது என தெரிய வரும்.
Similar News
News October 30, 2025
பசுமைக்குடில் கட்டுமானம் மற்றும் பயிர் சாகுபடி குறித்த பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பசுமைக்குடில் கட்டுமானம் மற்றும் பயிர் சாகுபடி குறித்த சிறப்பு பயிற்சி (அக்டோபர் 30 முதல் நவம்பர் 28 வரை) நடைபெறும். 12ஆம் வகுப்பு தகுதி பெற்றோர் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் தொழில்முனைவு மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து வழிகாட்டல் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு swc@tnau.ac.in, 9789982772-ல் ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
News October 29, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (29.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 29, 2025
கோவையிலிருந்து புறப்பட்டார் துணை குடியரசு தலைவர்!

துணைக் குடியரசு தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் திருப்பூரில் இன்று நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மதுரை செல்வதற்காக சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் வந்தடைந்து தனி விமானம் மூலம் மதுரை புறப்பட்டார். துணை குடியரசு தலைவர் காரிலேயே பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் வருகை புரிந்து மதுரை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


