News October 29, 2025

சேலத்தில் இலவச தையல் பயிற்சி!

image

சேலம் மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில், துணி அளவெடுத்தல், சுடிதார், ஜாக்கெட், சட்டை போன்ற ஆடைகள் தைக்க பெண்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் காலை, 9:30 முதல் மாலை 4:30 மணி வரை என45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு சேலம் குகை பகுதியில் அமைந்துள்ள சிட்ரா விசைத் தறி பணி மையம் அல்லது 0427 -2219486, 98438 85587 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.SHAREit

Similar News

News October 30, 2025

சேலம்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 30, 2025

சேலம் மத்திய குற்ற பிரிவு அலுவலகம் இடமாற்றம்

image

சேலம் டவுன் காவல் நிலைய வளாகத்தில் மத்திய குற்ற பிரிவு அலுவலகம் செயல்பட்டு வந்தது. 160 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலுவலகம் கட்டப்பட்டது. பழமையான கட்டிடம் எனவும் அதனை இடிக்க கூடாது என தெரிவித்தனர். மழைக்காலம் என்பதால் அதிக அளவில் தண்ணீர் உள்ளே வருகிறது. இதனை அறிந்த கமிஷனர் ஐந்து ரோடு பகுதிக்கு மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் மாற்றி உத்தரவிட்டார்.

News October 30, 2025

சேலம்: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை!

image

சேலம் அரசுப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஊரகத் திறனாய்வுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த தொகை மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. இதற்கு www.dge.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!