News October 29, 2025
மறைந்தும்.. மறையாத ‘கவிஞர் வாலி’

கருத்தாழமிக்க எளிய தமிழ் சொற்களை பாடல்களில் அமைத்து, அழியா புகழ் பெற்ற கவிஞர் வாலிக்கு இன்று பிறந்தநாள். சினிமா பாடல்களில் அவரின் முத்திரை இல்லாத இடமே இல்லை எனலாம். ‘மின்வெட்டு நாளில் இங்கு, மின்சாரம் போல வந்தாயே’ என்ற வரிகளை எழுதிய போது வாலிக்கு வயது 81. அவருக்குள் காதலும், எழுத்தும் கொஞ்சமும் குறையவில்லை என்பதற்கு இந்த வரிகள் சிறந்த எடுத்துகாட்டு. வாலியின் வரிகளில் உங்களை கவர்ந்தது எது?
Similar News
News October 30, 2025
ராசி பலன்கள் (30.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News October 30, 2025
டெங்குவை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது: EPS

TN-ல் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாக EPS சாடியுள்ளார். டெங்கு எதிரொலியாக TN முழுவதும் கூடுதல் மருத்துவ முகாம்களை நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று X-ல் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், உள்ளாட்சிகளில் தூய்மை பணியாளர்களை கொண்டு சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News October 30, 2025
₹441 லட்சம் கோடி.. உலகின் NO.1 நிறுவனமான Nvidia

உலகின் முதல் $5 டிரில்லியன் (₹441 லட்சம் கோடி) சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக Nvidia உருவெடுத்துள்ளது. அதுவும் முதல் $4 டிரில்லியன் மதிப்பு கொண்ட நிறுவனமாக உருவெடுத்த 3 மாதங்களில் இந்த சாதனையை படைத்துள்ளது. கிராஃபிக்ஸ் சிப் தயாரிப்பில் இருந்து AI சிப் தாயாரிப்புக்கு மாறியதில் இருந்து Nvidia-ன் பங்குகள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, 2022-ல் OpenAI தொடங்கியது முதல் அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது.


