News October 29, 2025

திருச்சி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News October 30, 2025

திருச்சி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 கிராம ஊராட்சிகளிலும் வரும் நவ.1ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News October 29, 2025

எஸ்பி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் எஸ்பி செல்வநாகரத்தினம் தலைமையில், இன்று நடைபெற்றது. இக்கூட்த்தில், மனு கொடுக்க வந்திருந்த பொதுமக்களிடமிருந்து மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக பெற்று குறைகளை கேட்டறிந்ததுடன், மனுக்கள் மீது துரிதமாக விசாரணை மேற்கொண்டு உரியநடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவலர்களூக்கு உத்தரவிட்டார்.

News October 29, 2025

திருச்சி: இ-ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிப்பது எப்படி?

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <>https://tnuwwb.tn.gov.in/<<>> என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில், Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!