News October 29, 2025
ஈரோடு: G Pay / PhonePe இருக்கா?

ஈரோடு மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
Similar News
News October 29, 2025
ஈரோடு மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் – ஆட்சியர் தகவல்

ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 01.11.2025 உள்ளாட்சிகள் தினத்தன்று முற்பகல் 11 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இதில் பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை உட்பட பல்வேறு விபரம் குறித்து விவாதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
News October 29, 2025
ஈரோடு: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

ஈரோடு மாவட்டத்தில் கீழ்கண்ட இடங்களில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி, காமாட்சி அம்மன் மண்டபம்-மேட்டுபுதூர் (சத்தியமங்கலம் வட்டாரம்), விஜயபுரி அம்மன் திருமண மண்டபம் – விஜயபுரி (பெருந்துறை வட்டாரம்), நஸ்ரத் இல்லம்-கொங்கஹள்ளி ரோடு (தாளவாடி வட்டாரம்), ராஜா கலையரங்கம் – காலிங்கராயன்பாளையம் (மேட்டுநாசுவம்பாளையம்-நகர்ப்புற பஞ்சாயத்து) ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
News October 29, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு!

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில், டெலிகிராம் வழியாக வரும் பகுதி நேர வேலைக்கான குறுஞ்செய்திகள் மற்றும் இணைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். இந்த மோசடிகளில், பணம் சம்பாதிப்பதாகக் கூறி, ஆரம்பத்தில் சிறிய தொகைகளை செலுத்துமாறு கேட்பார்கள் அல்லது தனிப்பட்ட தகவல்களைத் திருடுவார்கள். எனவே விழிப்புடன் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இலவச எண். 1930 தொடர் கொள்ளலாம் என காவல்துறை அறிவிப்பு!


