News October 29, 2025
பசும்பொன்: பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர் கலைவாணி என்பவர் நேற்று பணி முடித்து கமுதி அரசு பள்ளியில் தங்கி இருக்கும் பொழுது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்ததாக தெரிகிறது. அவரது உடல் கமுதி மருத்துவமனையில் உள்ளது.
Similar News
News October 30, 2025
அக்னி தீர்த்தக் கடலில் கரை ஒதுங்கிய சடலம்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் நேற்று (அக் 29) புதன்கிழமை 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பது குறித்து பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த கடலோர் பாதுகாப்பு குழுமப் போலீஸார் உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News October 30, 2025
தேவர் ஜெயந்தி விழா.. 500 சிசிடிவி கேமிராக்கள்

பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 28 முதல் 30 வரை நடைபெறும் 118வது தேவர் ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜை விழாவை முன்னிட்டு, பசும்பொன் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
News October 29, 2025
இராமநாதபுரம்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (அக். 29) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.


