News October 29, 2025

காஞ்சி: 1022 ஏரிகளில் 159 ஏரிகள் முழுக் கொள்ளளவு நிரம்பின

image

காஞ்சிபுரம் பாலார் நீர்ப்பாசனப் பிரிவு அறிக்கையின்படி, 28.10.25 காலை 6.00 மணியளவில் 1022 ஏரிகளில் 159 ஏரிகள் முழுக் கொள்ளளவு வரை நிரம்பியுள்ளன. 168 ஏரிகள் 76-99% அளவிலும், 314 ஏரிகள் 51-75% அளவிலும், 289 ஏரிகள் 26-50% அளவிலும் நிரம்பியுள்ளன. 88 ஏரிகளில் 25% இற்கும் குறைவான நீர்மட்டமே உள்ளது. காஞ்சிபுரம் பகுதியில் 114 மி.மீ, செங்கல்பட்டு 132.20 மி.மீ., டூசி பகுதியில் 8.20 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Similar News

News October 30, 2025

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (அக்.29) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 29, 2025

காஞ்சி: ரூ.20,000 மானியத்தில் இ-ஸ்கூட்டர் வேண்டுமா?

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். 5)விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.(SHARE பண்ணுங்க)

News October 29, 2025

காஞ்சி: பெண்களுக்கு ஆபீஸில் பிரச்னையா? உடனே CALL!

image

காஞ்சிபுரம் மாவட்ட பெண்களே.., உங்களுக்கு அலுவலகத்திலோ, பொது இடங்களிலோ, பாலியல் சீண்டல், அணுகுதல், வன்முறை, பின் தொடர்தல் போன்ற எவ்வித பிரச்னைகளை சந்தித்தாலும் உடனே 181 எனும் கட்டணமில்லா எண்ணை அழைக்கவும். உங்களுக்கான உடனடி உதவி கிடைக்கும். மேலும், பெண்கள் பாதுகாப்பு குறித்த திட்டங்களை தெரிந்துகொள்ளவும் இந்த எண்ணை அழைக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!