News October 29, 2025
நாகையில் தீக்கிரையான வீடு

திருக்குவளை அருகே 119 அனக்குடி ஊராட்சிக்குட்பட்ட மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் இடும்பையன் என்பவரது மனைவி மல்லிகா. இவர்களது கூரை வீடு மின் கசிவு காரணமாக நேற்று மாலை திடீரென தீ பிடித்த எரிந்தது. அக்கம் பக்கத்தினர் விரைந்து தீயை அணைக்க முயற்சி செய்தும், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் சேதமடைந்தன. இதுகுறித்து வலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 30, 2025
நாகை: மக்களிடமிருந்து 17 மனுக்களை பெற்ற எஸ்பி

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 17 மனுக்களை பெற்று, பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
News October 29, 2025
நாகை எஸ்.பி.அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 17 மனுக்களை பெற்று, பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
News October 29, 2025
நாகை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா?

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <