News October 29, 2025
விலை ₹4,000 வரை உயருகிறது

மெமரி ‘சிப்’ தட்டுப்பாடு காரணமாக வரும் புத்தாண்டு முதல் 5%-10% வரை செல்போன்களின் விலை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. டிரெண்ட் போர்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் எல்பிடி, டிஆர்4 X, என்ஏஎன்டி பிளாஷ் மெமரி சிப்களின் விநியோகம் கணிசமாக குறைந்துள்ளது. இதனால், உற்பத்தி செலவுகள் அதிகமாவதால் அதனை ஈடுசெய்ய விலையை உயர்த்த செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
Similar News
News October 29, 2025
‘Baahubali: The Epic’ படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்

<<18096213>>‘Baahubali: The Epic’ <<>>படம் நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது. இதில் நீளம் கருதி பல காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக ராஜமௌலி தெரிவித்துள்ளார். அவந்திகாவின் காதல் கட்சிகள், மனோகரி, கண்ணா நீ தூங்கடா, பச்சை தீ நீயடா உள்ளிட்ட பாடல்கள், சில போர் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஒவ்வொரு காட்சியும் படத்தின் கதையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
News October 29, 2025
தூங்கும் முன் குழந்தைகளுக்காக இத பண்ணுங்க

தினமும் தூங்குவதற்கு முன் உங்கள் குழந்தையிடம் 5 நிமிடங்கள் மனம் விட்டு பேசுங்கள். நாள் முழுக்க என்னென்ன செய்தார்கள், எது அவர்களை கஷ்டப்படுத்தியது, பிடித்த விஷயங்கள் எது, கற்றுக்கொண்டது என்ன என்பதை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். இது பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே உள்ள பிணைப்பை அதிகரிக்கிறது. அத்துடன், அவர்களும் நிம்மதியாக உணர்வார்கள் என நிபுணர்கள் சொல்கின்றனர். SHARE.
News October 29, 2025
₹500 நோட்டு கையில் இருக்குதா? உடனே இதை பாருங்க

₹2000 நோட்டுகளின் புழக்கம் நிறுத்தப்பட்ட பிறகு, ₹500 கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்திருப்பதாக மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் வெள்ளை இடம் இருக்கும். அதனை மேலே பிடித்து பார்த்தால் காந்தி முகம் வாட்டர்மார்க்காக தோன்றும். ₹500 நோட்டாக இருந்தால், 500 என்ற எண் அதில் தெரியும். போலி நோட்டு அச்சிடுபவர்களால் இதனை அச்சிட முடியாது. SHARE IT


