News April 18, 2024
திருவள்ளூர்: கடந்த தேர்தல் ஒரு பார்வை

2019 மக்களவைத் தேர்தலில், திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார் வெற்றிபெற்று எம்பியானார். இவர், மொத்தம் 7,67,292 (54.5%) வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். சுயேச்சை வேட்பாளரான கமலநாதன் என்பவர் 705 வாக்குகள் பெற்று கடைசி இடம் பிடித்தார். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! நம் ஓட்டு நமது குரல்!
Similar News
News August 25, 2025
திருவள்ளூர் எம்பி முக்கிய அறிவிப்பு

திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் இன்று ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியிட்டு உள்ள செய்தியில்; “உங்கள் குரல் முக்கியமானது” என்ற தலைப்பில் மக்கள் குறைகள் அல்லது பரிந்துரைகளை தெரிவிக்க QR குறியீட்டை ஸ்கேன் செய்து தெரிவிக்கலாம். மேலும் உங்கள் பெயர், முகவரி, தொடர்பு எண்ணையும் கட்டாயம் சேர்க்கவும் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
திருவள்ளூர்: லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க

திருவள்ளூர் மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27667070) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.
News August 25, 2025
BREAKING- திருவள்ளுர்: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

பூவிருந்தவல்லி சொன்னீர்குப்பத்தில் விநாயகர் சிலைக்கு பந்தல் அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்து பரத் என்பவர் உயிரிழந்துள்ளார். அதே போல் சென்னையில் விநாயகர் சிலை அமைக்க பந்தல் அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாதவரத்தில் பந்தல் அமைக்கும் போது பிரசாந்த் என்பவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவங்கள் அந்த பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை காலங்களில் உஷாரா இருங்க.