News October 29, 2025
வேலூரில் குற்ற வழக்கில் தொடர்புடைய வாகனங்கள் ஏலம்

வேலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஆட்டோ நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் வரும் (அக்டோபர் 30 )அன்று காலை 8 மணி முதல் வசந்தபுரம் நேதாஜி மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது ஏல முன்பணமாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 5000/-, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 10,000/- செலுத்தி கலந்து கொள்ளலாம் என வேலூர் மாவட்ட காவல்துறை செய்தியை வெளியிட்டுள்ளது.
Similar News
News October 30, 2025
வேலூர்: இரவு ரோந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் நேற்று (29.10.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News October 30, 2025
வேலூரில் வார்டு சிறப்பு கூட்டம் – மேயர் பங்கேற்பு

வேலூர் மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண் 38ல் வார்டு சிறப்புக் கூட்டம் நிகழ்ச்சி இன்று (அக்.29) நடைபெற்றது. இதில் வேலூர் மேயர் சுஜாதா கலந்து கொண்டு மனுக்களை பெற்றுக் கொண்டார். மனுக்கள் மீது உரிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். உடன் மாமன்ற உறுப்பினர் திருப்பாவை பகுதி திமுக செயலாளர் மற்றும் வட்டக் கழக செயலாளர் இருந்தனர்.
News October 29, 2025
காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (அக்.29) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.


