News October 29, 2025
தட்டையான வயிறு பெற இந்த பயிற்சி பண்ணுங்க!

தட்டையான வயிற்றை பெற Bicycle Crunches பண்ணுங்க ★தரையில் மல்லாந்து நேராக படுக்கவும். 2 கைகளையும் தலையின் பின்னால் வைத்து, 2 கால்களையும் முட்டிவரை மடக்கி வைக்கவும். இப்போது, இடது காலை மார்பு நோக்கி கொண்டு வரும்போது, வலது முழங்கை அதை தொடும் வகையில் உடலை மடக்கவும். அடுத்து வலது காலை கொண்டு வரும்போது, இடது முழங்கையை தொடவும். இப்படி மாறி மாறி செய்யவும். ஒரு நிமிடத்திற்கு 5–6 முறை செய்யலாம்.
Similar News
News October 29, 2025
வியக்க வைக்கும் உண்மைகள்

விண்வெளி என்பது நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத பல்வேறு அதிசயங்கள் நிறைந்தவை. கோடிக் கணக்கான நட்சத்திரங்களுடன் மின்னும் விண்வெளி தொடர்பாக பல வியக்கும் உண்மைகள் உள்ளன. அவை என்னென்ன என்று மேலே, போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களை வியக்க வைத்த உண்மை எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 29, 2025
வாரிசுகளுக்காக அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி: அமித்ஷா

மிதிலை நகரில் விரைவில் சீதா தேவிக்கு கோயில் கட்டப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். பிஹாரில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், லாலு பிரசாத் தனது மகனை பிஹார் CM ஆக்கவும், சோனியா காந்தி தனது மகனை PM ஆக்கவும் முயற்சிக்கின்றனர்; ஆனால் அந்த பதவிகள் காலியாக இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும், பாஜக ஆட்சியில் நடந்த J&K சட்டப்பிரிவு 370 நீக்கம், ராமர் கோயில், ஆபரேஷன் சிந்தூர் பற்றியும் குறிப்பிட்டார்.
News October 29, 2025
பிரபல நடிகர் மரணம்.. மனைவி உருக்கம்

2021-ம் ஆண்டு இதே நாளில் கன்னட திரையுலகமே சோகத்தில் உறைந்தது. கன்னட சூப்பர் ஸ்டாராக இருந்த புனித் ராஜ்குமாரின் இழப்பே அதற்கு காரணம். 46 வயதிலேயே அவரது உயிரை மாரடைப்பு பறித்தது பெரும் சோகம். சோஷியல் மீடியாவில் திரைபிரபலங்களும், ரசிகர்களும் புனித்தின் நினைவலைகளை இன்று பகிர்ந்து வருகின்றனர். அவரது மனைவி அஷ்வனியும், ‘அப்புவை 4-வது ஆண்டாக அன்புடன் நினைவுகூர்கிறேன்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.


